கனடாவில் நுட்பமான முறையில் ஏமாற்றப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன்!

Report Print Vethu Vethu in கனடா

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் மோசடியான முறையில் ஏமாற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டொராண்டோ பகுதியில் iPad ஒன்றை கொள்வனவு செய்த இலங்கை இளைஞனுக்கு களிமண் பெட்டியை வழங்கிய ஏமாற்றிய கடை ஒன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Brampton பகுதியில் Walmart என்ற கடையில் சசிதரன் நடராஜன் என்ற இளைஞன் 1000 டொலர்களை செலவிட்டு iPad Pro ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

அவர் தனது தாயாருக்கு பிறந்த நாள் பரிசு வழங்கும் நோக்கில் இதனை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

தனது பிறந்த நாள் அன்று காலை தாயார் தனது மகனுக்கு முன்னால் பரிசு பெட்டியை திறந்து பார்த்துள்ளார்.

எனினும் தங்களுக்கு அதிர்ச்சி ஒன்றே காத்திருந்ததாகவும், iPad க்கு சமமான நிறையில் களிமண் துண்டு ஒன்று iPad பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததாக என நடராஜன் தெரிவித்துள்ளார்.

“களி மண்ணை பார்த்த பின்னர், களி மண்ணுக்கு கீழ் ஏதாவது இருக்கும் என நினைத்தேன். எனினும் அங்கு ஒன்றுமே இல்லை. சாஜர் கூட அதில் இல்லை”

பிளாஸ்டிக் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில், iPadயை கொண்டு வந்ததாகவும், தாயின் பிறந்த நாளுக்கு பின்னர் அதனை திருப்பி கடையிலேயே கொடுத்து விட்டதாகவும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த கடை உரிமையாளர் அவருக்கு பணத்தை அல்லது புதிய iPad ஒன்றை திருப்பி தரவில்லை என நடராஜா குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் நிறுவனம் அவ்வாறு செய்யாது, கடைக்கு வருபவர்களுக்கு சிறந்தததையே கொடுப்போம் என கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஒரு வழியாக போராடி தனது பணத்தை மீளபெற்ற நடராஜன் அந்த பணத்தில் மீண்டும் ஐபோன் நிறுவனத்திடம் iPad கொள்வனவு செய்து தனது தாய்க்கு பரிசளிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.