கனடாவில் வாழ்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! புதிய சட்டங்கள் அறிமுகம்

Report Print Dias Dias in கனடா

கனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சட்டங்களுக்கும் கனடா அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்.

  1. இயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  2. அடுத்து வாகனம் ஓட்டும் போது கைகளில் மின்ணணு சாதனத்தை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
  3. வாகனம் ஓட்டும் போது செல்லுலர் போன்களை பேசுவதற்காகவோ அல்லது தகவல் அனுப்புவதற்காகவோ, வரைபடங்களை(Map) சரி பார்த்தால் அல்லது பிளேலிஸ்டுகளை மாற்றவோ பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
  4. வாகனம் ஓட்டும் போது உணவு உண்ணுதலும் குற்றமாக கூறப்பட்டாலும் இதற்காக வாகனம் ஓட்டும் உரிமம் இடைநீக்கம் செய்யப்படாது என்றும் ஆனால், ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது உணவைப் பொறுத்து ஆறு குறைபாடு புள்ளிகளை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.