கனடாவில் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்

Report Print Vethu Vethu in கனடா

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Scarborough பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 36 வயதான லிங்கதாஸன் சுந்தரமூர்த்தி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Kennedy வீதி மற்றும் Highway 401 பகுதிக்கு அருகில் உள்ள 100 Dundalk Drive பகுதியில் உள்ள குடியிருப்பில் சுந்தரமூர்த்தி வாழ்ந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு பல முறை அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்பிற்கு அதிகாலையில் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு பல முறை துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளான நிலையில் படுகாயமடைந்த நபர் ஒருவரை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

உடனடியாக அவரை காப்பாற்றுவதற்கு வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.

குறித்த நபரை சுற்றி வளைத்து பலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும், இருவர் மாத்திரமே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

17 மற்றும் 25 வயதுடையவர்களே சந்தேக நபர்களாக கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் இரண்டு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் டொரொன்டோ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Victim in fatal Scarborough apartment shooting ID'd as Lingathasan Suntharamoorthy