கனடா, ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா

Report Print Dias Dias in கனடா

கனடா, ஒன்ராரியோ மாகாணசபை அமைந்துள்ள குயீன்ஸ் பார்க்கில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், தமிழர் மரபுரிமை மாதமும் நினைவு கூரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் ஜனவரி 15ஆம் திகதி மாலை 6 மணியளவில் இவ்விழா இடம்பெற்றுள்ளது.

மாகாணசபை உறுப்பினரான விஜய் தணிகாசலம் நிகழ்வை தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில் ஒன்ராரியோ மாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

ஒன்ராறியோ மாகாண பொது அரச சட்டவாளரும், அமைச்சருமான கரோலின் மல்ரோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நல்ல வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்வில், மாகாணசபை உறுப்பினரான லோகன் கணபதியும் சிறப்புரையாற்றியுள்ளார். இதில் ஏராளமான தமிழ் சமூகப் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers