கனடாவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் - இருவர் மரணம் - பலர் ஆபத்தான நிலையில்

Report Print Vethu Vethu in கனடா

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ பகுதியின் Vaughan என்ற இடத்தில் இந்த சம்பவம் அதிகாலை வேளையில் ஏற்பட்டுள்ளது.

கனடா நேரப்படி இன்று அதிகாலை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக York Regionalபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 4.16 மணியளவில் Dream Palace Banquet மண்டபம் மற்றும் விடுதிக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் சத்தம் பலருக்கு கேட்டுள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பாரிய காயத்தில் கிடந்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள் அவர்களை அவதானித்துள்ளனர்.

மற்றைய நபர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இன்னமும் தகவல் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers