கனடா செல்லும் ஆசையில் இலங்கை பெண்ணிடம் ஏமாந்த இளைஞர்கள்!

Report Print Vethu Vethu in கனடா

கனடாவுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண் ஒருவர் திருச்சி குற்ற விசாரணை பிரிவு பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் 5 பேருக்கு கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து 86 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய ராஜீ ரத்தினராஜா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு நிமல் ராஜ் என்பவரும் தொடர்புப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோசடியில் ஈடுபட்ட இருவருமே இலங்கை அகதிகள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் ஜீன் மாதம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிக்கமைய பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர் அதற்கமைய நேற்றைய தினம் ராஜீ கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் 3 வருடங்கள் பணியாற்றி அனுபவம் கொண்ட ரமேஷிற்கு கனடாவில் சிறப்பான தொழில் ஒன்றை பெற்றுத் தருவதாக ராஜீ வாக்குறுதியளித்துள்ளார்.

விசா நடவடிக்கைகளுக்காக பணம் செலுத்த வேண்டும் என ராஜீ கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கமைய ரமேஷ் பணம் செலுத்தியுள்ளார். இதேபோன்று 4 பேரை வெளிநாடு அனுப்புவதாக கூறி ராஜீ பணம் பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கமைய 5 பேரிடமும் மொத்தமாக 86 இலட்சம் ரூபாய் பணத்தை ராஜீ பெற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் ராஜீயினால் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அதற்கமைய நேற்றைய தினம் அவரது வீட்டில் வைத்து ராஜீ கைது செய்யப்பட்ட போதிலும் நிமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

கைதின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ராஜீ 2012 ஆம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்னரும் ஏமாற்று வேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ராஜீ செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.