கனடா வாழ் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

Report Print Dias Dias in கனடா

கனடா நாட்டின் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெறுமதிமிக்க கற்கள் மற்றும் அணிகலன்கள் என்பன ஏலத்தில் விடப்படவுள்ளன.

நாளைய தினம்(17ஆம் திகதி ) இந்த அரிய வாய்ப்பினை கனடா வாழ் மக்களுக்கு அந்நாட்டு வருவாய் துறையினர் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளனர்.

நாளை பகல் 02.00 மணியளவில் குறித்த அணிகலன்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்போது பெறுமதியான ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் மிகக் குறைவான விலையில் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், டெல்டாஹோட்டல், ஸ்கேர்போரூக்ஹ், டொரண்டோ (Delta Hotel in 2035 Kennedy Road, Scarborough, Toronto) என்ற இடத்தை அணுக முடியும்.

இதில், பெண்களுக்கான ரோலக்ஸ் 18kt மற்றும் துருப்பிடிக்காத எஃகு வகைகள், பல சிறப்பம்சங்களுடன் Rolex (ரோலக்ஸ்), Cardier (கார்டியர்), Audemarspiguet, patakphilippe, Tiffany & Co. அத்துடன் வைரமோதிரம், வளையல்கள், கை செயின்கள், கழுத்தணிகள் மற்றும் உயர் ஆபரணங்கள் அனைத்து பொருட்களும் தனித்தனியாக அதி உயர் ஏலத்தில் விற்கப்படவுள்ளன.

இதில் கலந்து கொள்பவர்கள் தங்களது அடையாள அட்டையைக் காட்டி தங்களது பெயரை ஏல அட்டையில் பதிவு செய்து கொள்வதன் மூலம் ஏல பொருட்களின் பட்டியலை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers