கனடாவில் கோர விபத்து - ஒருவர் பலி - இருவர் ஆபத்தான நிலையில்

Report Print Vethu Vethu in கனடா

கனடாவில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ மாகாணத்தின் cottage country பகுதியில் அதிகாலை வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து வாகனம் தலைகீழாக புரண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் பயணித்த நால்வரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏனையவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் ரொரண்டோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இன்னொருவர் பெரிய காயங்களுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் இன்னமும் வெளியிடவில்லை.

Latest Offers