சாதிக்க துடிக்கும் ஈழத் தமிழர்களிற்கு கனடாவில் அரிய வாய்ப்பு

Report Print Dias Dias in கனடா

தமிழன் என்று மார்த்தட்டி பெருமை கொள்ளும் தமிழர்களின் புகழினை உலகறிய செய்ய புலம்பெயர் தமிழர்களுக்காக பிரமாண்டமான ஒரு மேடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடா டொரன்டோவில் 'ஐ.பி.சி தமிழா 2019' எனும் மிகப்பிரமாண்டமான ஒரு மேடை நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை ஐ.பி.சி தமிழ் ஊடகம், Scotiabank Arena (Air Canada Centre) வில் ஏற்பாடு செய்துள்ளது.

‘ஐ.பி.சி தமிழா – டொரன்டோ 2019’ நிகழ்ச்சியின் நுழைவுச்சீட்டு வெளியிடும் நிகழ்வு இன்று JC’s மண்டபத்தில் இடம்பெற்றது.

அத்துடன் நிகழ்வின் நுழைவுசீட்டுகளை “ticketmaster.ca” என்ற இணையதளத்திலும், தமிழ் வர்த்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

குறித்த நிகழ்வை தீபன் ராஜேந்திரன் அறிமுகத்துடன் ஆரம்பித்து வைத்துள்ளார். அவரை தொடர்ந்து நிகழ்வு பற்றியும், நிகழ்வுக்கான தமது உழைப்புகள் பற்றியும் விபரமான தரவுகளை ஐ.பி.சி தமிழ் நிர்வாகியான தினா வழங்கியுள்ளார்.

மேலும், ஐ.பி.சி தமிழ் அதிபர் பாஸ்கரன் கந்தையா (IBC Tamil Chairman) ஐ.பி.சியின் நோக்கங்கள் பற்றியும், சிதறிய எமது தமிழ் இனத்தை ஒற்றை புள்ளியில் மீண்டும் சேர்க்கும் அவா குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, Scotiabank Arena மேடையில் இது வரை பல முன்னணி கலைஞர்கள் திறமைகளை வெளிபடுத்தியிருந்தாலும், புலம்பெயர் தமிழர்கள் பார்வையாளர்களாகவே சென்றுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று முதன் முறை எமது கலைஞர்களும் சாதனையாளர்களாக உருவெடுக்க போகின்றனர். இது எமது கலைஞர்களை ஊக்கப்படுத்தும் தருணம்.

ஐ.பி.சி தமிழா உலகெல்லாம் பரந்திருக்கும் எம்மவரின் தனித்துவமான கலைத்திறனை அடையாளம் கண்டு சர்வதேச அரங்கில் மிளிரச்செய்ய போகின்றது. இந்த மேடை புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷமாகும்.

இந்த நிகழ்வை கண்டுகளிக்க உங்களுக்கு தேவையான ஆசனங்களை நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம். ஆசன பதிவிற்கு இந்த லிங்கை அழுத்தவும்.

ஆசன பதிவு....


Latest Offers