கனடாவில் சிதறிய தமிழ் இனத்தை ஒன்று சேர்க்கும் பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சி

Report Print Dias Dias in கனடா

சிதறிய எமது தமிழ் இனத்தை ஒற்றை புள்ளியில் மீண்டும் சேர்ப்பதே எனது அவா என ஐ.பி.சி தமிழ் அதிபர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.

கனடா டொரன்டோவில் 'ஐ.பி.சி தமிழா 2019' எனும் மிகப்பிரம்மாண்டமான ஒரு மேடை நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந் நிகழ்ச்சியின் நுழைவுச்சீட்டு வெளியிடும் நிகழ்வு JC’s மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,ஐ.பி.சியின் நோக்கங்களும், அதன் எதிர்கால திட்டங்களும், ஐ.பி.சி தமிழாவின் கனவுகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிகழ்வு திட்டமிட ஆரம்பித்தது முதல் இன்று வரை தாம் கடந்துவந்த வளர்ச்சி பற்றியும், நிகழ்வின் முக்கியத்துவம் மற்றும் கலைகளினூடே விழுந்த, சிதறிய எமது தமிழ் இனத்தை ஒற்றை புள்ளியில் மீண்டும் சேர்க்கும் தனது அவா குறித்தும் பேசியுள்ளார்.

இவரது பேச்சு வந்தோரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் இப்படியான நிகழ்ச்சிகள் எமது கலைஞர்களுக்கும், மக்களுக்கும் கட்டாயம் தேவை என்பதுடன் நிகழ்வின் வெற்றியின் தேவையையும் உணர்த்தியுள்ளது.

இந்நிகழ்வை தீபன் ராஜேந்திரன் அறிமுகத்துடன் தொடங்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து ஐ.பி.சி தமிழ் நிர்வாகியான தினா, நிகழ்வு பற்றிய அறிமுகத்துடன், தாம் இந்நிகழ்வு தயாரிப்புக்கு போடும் திட்டங்கள் பற்றியும், நிகழ்வுக்கான தமது உழைப்புகள் பற்றிய விபரமான தரவுகளையும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், வருகை தந்திருந்தவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. வருகை தந்தோர் நிகழ்வுக்கு ஆதரவை தெரிவித்திருந்ததுடன் ஆரோக்கியமான கருத்துக்களையும் வழங்கியிருந்தனர்.

இப் பிரமாண்ட நிகழ்வுக்கு 30,000இற்கும் மேற்பட்ட மனித மணித்தியாலங்கள் செலவு செய்யப்படுவதாகவும், 2,000இற்கும் மேற்பட்ட LCD SCREEN உபயோகிக்கப்படவுள்ளதாகவும், 250இற்கும் மேற்ப்பட்ட தொண்டர்கள் இந்நிகழ்வுக்காக உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழன் என்று மார்த்தட்டி பெருமை கொள்ளும் தமிழர்களின் புகழினை உலகறிய செய்ய புலம்பெயர் தமிழர்களுக்காக பிரமாண்டமான ஒரு மேடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரந்திருக்கும் எம்மவரின் தனித்துவமான கலைத்திறனை அடையாளம் கண்டு, அங்கீகரித்து, ஊக்கப்படுத்தி, சர்வதேச அரங்கில் நட்சத்திரங்களாக மிளிரச்செய்யும் நோக்குடன் 1000 எமது தமிழ் கலைஞர்களை ஒரே மேடையில் ஏற்றி தமிழையும், தமிழின் பெருமையையும், தமிழரின் கலைகளையும் அடுத்த தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சியாக ‘IBC தமிழா – டொரன்டோ 2019’ வடிவமைக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக நிகழ்வு ஏற்பாட்டின் பணிகள் பிரம்மாண்டமாக நடந்தேறி வருகின்றன.

இதேவேளை, Scotiabank Arena மேடையில் இது வரை பல முன்னணி கலைஞர்கள் திறமைகளை வெளிபடுத்தியிருந்தாலும், புலம்பெயர் தமிழர்கள் பார்வையாளர்களாகவே சென்றுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று முதன் முறை எமது கலைஞர்களும் சாதனையாளர்களாக உருவெடுக்க போகின்றனர்.

இது எமது கலைஞர்களை ஊக்கப்படுத்தும் தருணம்.ஐ.பி.சி தமிழா உலகெல்லாம் பரந்திருக்கும் எம்மவரின் தனித்துவமான கலைத்திறனை அடையாளம் கண்டு சர்வதேச அரங்கில் மிளிரச்செய்ய போகின்றது.

இந்த மேடை புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷமாகும்.

அத்துடன் நிகழ்வின் நுழைவுசீட்டுகளை “ticketmaster.ca” என்ற இணையதளத்திலும், தமிழ் வர்த்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நிகழ்வை கண்டுகளிக்க உங்களுக்கு தேவையான ஆசனங்களை நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம். ஆசன பதிவிற்கு இந்த லிங்கை அழுத்தவும்.

ஆசன பதிவு....