கனடாவில் அமுலுக்கு வரும் புதிய தடை! பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிவிப்பு

Report Print Murali Murali in கனடா

மீள்சுழற்சி செய்ய முடியாத மற்றும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்போவதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

2021ம் ஆண்டு முதல் இது குறித்த தடை அமுலுக்கு வரவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கனடாவில் 10 சதவீதத்துக்கும் குறைவான பிளாஸ்டிக் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறன. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இந்நிலையில், 2021ம் ஆண்டு முதல் கனடாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்படவுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.