ஈழத்தமிழர் வாழ்வில் கனடாவில் இடம்பெற்ற வரலாற்று சாதனை

Report Print Sujitha Sri in கனடா

கனடாவில் நேற்றைய தினம் மிகப் பெரும் வரலாற்று சாதனையொன்று படைக்கப்பட்டிருந்தது.

கனடா வாழ் மக்களுக்கு இனிமேல் காண கிடைக்குமா என எண்ணும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக ஐ.பி.சி தமிழா டொரண்டோ 2019 திருவிழா நடைபெற்றிருந்தது.

ஆயிரம் கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் உலகமே வியக்கும் வகையில் பல்லாயிரக்காணக்கான தமிழர்களின் கண்களுக்கு விருந்தளித்து உணர்வுகளுடன் சங்கமமாகியிருந்தது நிகழ்வு.

இதில் கலை நிகழ்வுகளால் கலைஞர்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் முன்னரே அவர்களை சொக்க வைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது பல்லாயிரக்கணக்கான மின்குமிழ்களின் ஒளி வெள்ளத்தில் திளைத்திருந்த பிரம்மாண்ட மேடை.

இதன் பின்னர் கலைஞர்களால் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள் பார்வையாளர்களின் மனதை முழுமையாக வசீகரித்திருந்ததாக கலந்து கொண்டவர்கள் தமது அனுபவங்களை பகிரும் போது தெரிவித்திருந்தனர்.

ஒவ்வொரு மணித்தியாலங்களும் நிமிடங்களாக நகருமளவிற்கு கலை நிகழ்வுகளும், ஒலி மற்றும் ஒளி, மேடை அமைப்புகளும் அனைவரது இதயங்களையும் கொள்ளை கொண்டிருந்தன.

வரலாற்றில் இதுபோன்றதொரு நிகழ்வு கனடாவில் நடைபெறுமா என்று பார்வையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் ஓர் புதுமையை தவறவிட்டுள்ளதாகவம் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.