கனடாவில் முன்னாள் கணவனால் நடுவீதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தர்ஷிகா

Report Print Tamilini in கனடா

கனடா ஸ்காபரோவில் நேற்று முன்தினம் மாலை இலக்கு வைக்கப்பட்டு கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட பெண் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக் கொலை தொடர்பில் அவரது முன்னாள் கணவரான 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்சிகாவை கத்தியால் வெட்டிச் சரித்து விட்டு, காரில் ஏறி கொலையாளி தப்பி சென்றுள்ளர்.

வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தர்சிகாவை கத்தியால் வெட்டிச் சரித்து விட்டு, கொலையாளி தப்பிச் செல்வதாக பொலிஸாருக்கு பலரும் தகவல் வழங்கியுள்ளனர். தீவிரமாக செயற்பட்ட பொலிஸார் மார்க்கம் பகுதியில் சுற்றிவளைத்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

சசிகரன்- தர்ஷிகா ஜோடி 2015இல் திருமணம் செய்தார்கள். தர்ஷிகாவை வீட்டு வன்முறைக்குள்ளாக்கி வந்த நிலையில் 2017இல் இருவரும் பிரிந்தனர்.

2017இல் எதிர்கொண்ட இரண்டு வன்முறை சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து சசிகரன் 2019 பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டிருந்த போதும், பிணை மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டதால் 29 நாட்கள் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

சசிதரனின் தாக்குதலில் நிலைகுலைந்த தர்ஷிகா 911 என்ற அவசர இலக்கத்தை அழுத்தி உதவிகோர முயன்றபோதும், அவரது அலறல் சத்தம்தான் பதிவாகியதாகவும், அந்த சத்தமும் வழக்கில் சாட்சியாக இணைக்கப்படுவதாகவும் பொலிசார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Latest Offers