கனடா தேசத்தை திரும்பிப் பார்க்கவுள்ள உலகத் தமிழர்கள்

Report Print Dias Dias in கனடா

கனடாவில் உள்ள தமிழர் நிறுவனங்களான Vibrant Hospitality Group and AGA Beauty ஆகியவை இணைந்து வழங்கும் சர்வதேச அழகுப் போட்டி நிகழ்வில் உலகத் தமிழ் அழகி என்னும் பட்டத்தைப் பெற்று முடிசூட்டப்படும் ஆர்வத்தோடு பல நாடுகளிலிருந்துஅழகிய இளம் தாரகைகள் கலந்து கொள்கின்றார்கள்.

இதில் ஆச்சரியம் எதுவென்றால் உலகளவில் முதற்தடவையாக நடைபெறும் விழாவில் போட்டிகளில் கலந்து கொள்ள விண்ணப்பித்த பல இளம் நங்கையர்கள் கனடாவிற்கான விசாக்களைப் பெற்று இன்னும் சில நாட்களில் இங்கு வந்து சேரவுள்ளார்கள்.

இலங்கை, இந்தியா மலேசியா, சிங்கப்பூர்,ஜேர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பல போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கனடா நோக்கிய பயணத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் இங்கும், கனடாவிலும் விழா ஏற்பாட்டாளர் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.