யாழ். தர்ஷிகாவின் கொலை வழக்கு தொடர்பில் கனேடிய நீதிமன்றத்தின் உத்தரவு

Report Print Vethu Vethu in கனடா

கனடாவில் நடு வீதியில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் வழக்கின் விபரங்களை வெளியிடுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தர்ஷிகாவின் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் சசிகரன் தனபாலசிங்கம் தனது இரண்டாவது நிதிமன்ற விசாரணையை கடந்த 18ஆம் திகதி எதிர்கொண்டார்.

இந்த விசாரணையின் போது ஊடகங்கள் கொலை வழக்கின் விபரங்களை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Scarboroughவில் தனது முன்னாள் கணவனினால் 27 வயதான தர்ஷிகா வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 38 வயதான சசிகரன் மீது முதலாம் நிலைக் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

கடந்த 18ஆம் திகதி சசிகரன் இரண்டாவது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டபோது அவரை Mitch Engel என்ற வழக்கறிஞர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இந்த வழக்கறிஞர் ஏற்கனவே தர்ஷிகாவைத் தாக்கிய குற்றச்சாட்டில் சசிகரனை பிரதிநிதித்துவப்படுத்தியவர். சசிகரனின் அடுத்த நீதிமன்ற விசாரணை அடுத்த மாதம் இரண்டாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தர்ஷிகாவிற்கும் அவரது கொலை குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அவரது முன்னாள் கணவனான சசிகரன் தனபாலசிங்கத்திற்கும் இடையிலான கசப்பான வாழ்வின் விபரங்கள் நீதிமன்றின் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன.

அவற்றில் 2017ஆம் ஆண்டிலேயே (கனடாவுக்கு வந்த சில வாரங்களில்) தர்ஷிகா, சசிகரனுக்கு எதிராக முன்வைத்த பல குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தர்ஷிகா கொல்லப்படுவதற்கு 18 மாதங்களுக்கு முன்னரே, தர்ஷிகா நீதிமன்றில் தனது கணவர் மூலம் எதிர்கொண்டதாகக் கூறப்படும் துஷ்பிரயோகத்தை வழக்கு விசாரணை ஒன்றில் விவரித்துள்ளார்.

You My Like this video