கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - நண்பன் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

Report Print Vethu Vethu in கனடா

கனடா Scarborough பகுதியில் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் நண்பர் ஒருவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இளைஞன் தனது நண்பர்களுடன் கைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். இதன்போது அங்கு திடீரென வந்தவர்கள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த சாரங்கன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பில் அவரது உயிர் நண்பன் சது ஸ்ரீ தகவல் வெளியிட்டுள்ளார்.

13 வருட உயிர் நண்பரை தேடி சென்ற போது அவர் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். இளம் வயதில் எங்களை விட்டுச் சென்றுள்ளார். எனது நண்பனுக்கு மெழுகுத்திரி வைத்து அஞ்சலி செய்ய வேண்டிய நிலைமை வரும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

சாரங்கன் மிகவும் எளிமையான, கடின உழைப்பாளி, அவரது குடும்பத்தை நன்கு கவனித்துக் கொண்டவர். அவர் கட்டுமானத்துறையிலும் அச்சிடும் தொழிலிலும் பணியாற்றினார் என நண்பன் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் தனது சகோதரிகளையும் தனது குடும்பத்தை நேசித்தார். அவர் தனது உறவினர்களை நேசித்தார். அவர் தனது உடன்பிறப்புகளைப் போலவே நம் அனைவரையும் நடத்தினார். அவரது மரணம் பலரை காயப்படுத்தியுள்ளது” என சாரங்கனின் உறவினர் திஷானி ராஜ் தெரிவித்துள்ளார்.

சந்திரகாந்தன் ஒருபோதும் எந்தவொரு குழுவினருடன் இணைந்து செயற்படவில்லை. இதனால் அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என எங்களுக்கு புரியவில்லை என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்திரகாந்தனை 20 ஆண்டுகளுக்கு மேலாக பார்த்த குடும்ப நண்பர் பிரகாஷ் சோமா, அவர் ஒரு நல்ல மனிதர் எனவும், எந்தவொரு பிரச்சினைக்கும் செல்ல மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.