டொரன்டோவில் புலம்பெயர் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் தினம்

Report Print Kanmani in கனடா

தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் நேற்றைய தினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டொரன்டோவில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து மாவீரர்களின் நினைவுகளோடு அவர்களுடைய திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இவ் அஞ்சலி நிகழ்வில் பெருமளவிலான மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழுணர்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.