கனடாவில் காணாமற்போன பெண்ணைத் தேடும் பொலிஸார்

Report Print Tamilini in கனடா

கனடாரொரன்ரோவில் கடந்த மூன்று நாட்களாக தமிழ்ப்பெண் ஒருவர் காணாமற் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கனடிய பொலிஸ் வெளியிட்டுள்ள தகவலில்,

53 வயதுடைய ஸ்ரீசக்தி குமாரசாமி என்ற பெண் கடந்த 15ம் திகதி மதியம் 12;30 மணியில் இருந்து காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசக்தி Finch Avenue East and Tapscott Road பகுதியில் இருந்து காணாமற்போயுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இப்பெண் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன போது ஸ்ரீசக்தி கருப்பு நிற கோட், கருப்பு நிற ஷூ மற்றும் சிவப்பு நிறத்தில் தொப்பி அணிந்திருந்தார்.

ஸ்ரீசக்தி குறித்து தகவல் தெரிந்தால் உடனே பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest Offers

loading...