கனடாவில் துப்பாக்கி சூடு - மூன்று பேர் மரணம் - நள்ளிரவில் நடந்த பயங்கரம்

Report Print Vethu Vethu in கனடா

கனடாவில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொரன்றோ டவுன்டவுன் பகுதியில், நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள தொடர் வீட்டுமனைத் தொகுதிக்குள் புகுந்தவர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு, ஒரே கட்டட அறையில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதற்காக பல கட்டடங்கள் பயன்படுத்துள்ளதாக தெரியவந்துள்ளதென உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மற்ற நபர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை ரொரன்றோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.