கனடாவில் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம்! சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்

Report Print Vethu Vethu in கனடா

கனடாவின் Calgary பகுதியில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளது.

இந்த தம்பதியின் குழந்தைகளில் இருவரும் கனடாவில் பிறந்திருந்தாலும் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிஷான் பெர்ணான்டோ, அவரது மனைவி சுலக்ஷன ஹேவாகே, 9 வயதான மூத்த மகன் மற்றும் கனடாவில் பிறந்த இரண்டு மகன்களே இவ்வாறான நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு கனடா சென்ற இந்த குடும்பத்தினர் இலங்கையில் தங்கள் உறவினரால் பாதுகாப்பு இல்லை என கூறி குடியுரிமை விண்ணப்பித்துள்ளனர்.

எனினும் இலங்கையில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதனை நிரூபிப்பதற்கு இவர்களால் சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்பதனால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

எனினும் பிள்ளைகள் கனடாவில் பிறந்தவர்கள் என்பதனை அடிப்படையாக கொண்டு மீண்டும் இந்த குடும்பத்தினர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

எப்படியிருப்பினும், கனடாவில் தங்கியிருப்பதற்கான இறுதி முயற்சியாக இந்த குடும்பத்தின் மூத்த மகனான 9 வயதுடைய Maneth Fernando, கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Marco Mendicinoவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

“கனடா நிறைய சிறந்த பாடசாலைகளை கொண்ட ஒரு பாதுகாப்பான இடமாகும். என் நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்” என Maneth தெரிவித்துள்ளார். நான் திரும்பிச் சென்றால், இலங்கை பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பார்கள், ஏனென்றால் என்னால் ஆங்கிலம் மட்டுமே பேச முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பெற்றோர் பிறந்த நாடான இலங்கைக்கு, தன்னையும் தனது குடும்பத்தினரையும் திருப்பி அனுப்பினால் அங்கு ஏதாவது நடந்து விடும் என தான் அச்சப்படுவதாக Maneth தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மார்ச் 3 ஆம் திகதி கொழும்புக்கு இந்த குடும்பத்தை திருப்பி அனுப்புவதற்கு கனடா எல்லை பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

எனினும் கனடாவில் இரண்டு பிள்ளைகள் பிறந்த நிலையில் அவர்களை திருப்பி இலங்கைக்கு அனுப்ப முடியாதென இலங்கை குடும்பத்தின் சட்டதரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர்களது வழக்கு மீள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers