கனடாவில் முதன்முறையாக நம்மவர்களை கௌரவிக்கும் பிரம்மாண்டமான நிகழ்வு Samyukta Awards Night

Report Print Shalini in கனடா

புதியதோர் ஆண்டில் கால்பதித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முதன்முறையாக நம்மவர்களை கௌரவிக்கும் வகையில் கனடா - டொரன்டோவில் Samyukta Awards Night நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

அந்த வகையில் திருமண நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் திருமண சேவை துறைசார் நம்மவர்களை கௌரவித்து மகிழ Samyukta Awards Night 2020 நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

March 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா - டொரண்டோவில் The Grand Cinnamon மண்டபத்தில் இது இடம்பெற உள்ளது.

உலகம் எங்கும் பரந்துவாழும் எம் உறவுகளிடையே திருமண சேவைத் துறைசார்ந்த தொழில் வல்லுனர்களை, திறமையாளர்களை உலக மக்கள் பங்களிப்போடு இனம் கண்டு மகுடம் சூட்டி மகிழும் மகோன்னதப் பொழுதாக அமையவிருக்கிறது Samyukta Awards Night விழா.

இந்த விருது வழங்கல் நிகழ்வில் 4000 தொழில்சார் வல்லுனர்கள் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு வருடமும் Samyukta Weeding Show நடைபெறும் நிலையில் முதன்முறையாக இவ்வாண்டு விருதுவழங்கும் நிகழ்வு கனடாவில் நடைபெறவுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு: 647.739.5750

Buy Tickets