கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்!

Report Print Vethu Vethu in கனடா

கனடா - Newmarket பகுதியில் வசிக்கும் தமிழர் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 2 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார்.

பத்மதாசன் சிவபாதசுந்தரம் (Pathmathasan Sivapathasundaram) என்ற தமிழரே இந்த பணப்பரிசை வென்றுள்ளார் என கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 22 ஆம் திகதி Ontario 49 என்ற லொத்தர் சீட்டில் 6 இலக்கங்களும் சரியாக பொருந்தியதனால் அவர் இந்த பரிசை வென்றுள்ளார்.

Ajax பகுதியில் உள்ள Sobeys என்ற இடத்தில் Westney வீதியில் வைத்து அவர் இந்த லொத்தர் சீட்டினை கொள்வனவு செய்துள்ளார்.

Ontario 49 லொத்தர் சீட்டு வாரத்தின் ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் குழுக்கல் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய கடந்த மாதம் 22ஆம் திகதி கொள்வனவு செய்த இந்த லொத்தர் சீட்டில் சரியாக 6 இலக்கங்கள் பொருந்தியுள்ளமையினால் பத்மதாசன் சிவப்பதாஸ்சுந்தரம் 2 மில்லியன் டொலர் வென்றுள்ளார்.

$2-million Ontario 49 lottery win for Newmarket man


you may like this video