கனடாவில் யாழ். தமிழ் பெண்ணொருவர் சுட்டுக் கொலை

Report Print Vethu Vethu in கனடா

கனடாவின் – ரொறன்ரோ, ஸ்காபரோ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண்ணொருவா் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

38 வயதான தீபா சீவரத்னம் என்ற பெண்மணியே கொலை செய்யப்பட்டதாக ரொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இவர், யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைப் பிறப்பிடமாக கொண்ட இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் எனத் தெரிய வந்துள்ளது.

பிரிம்லி ஆர்.டி.க்கு அருகிலுள்ள முர்ரே அவன்யு பகுதியிலுள்ள அவரின் இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தீபாவின் நெஞ்சுப் பகுதியில் குண்டு பாய்ந்தமையினால் உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் குறிப்பிட்ட பெண்ணின் தாய், படுகாயமடைந்த நிலையில் Sunnybrook வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சந்தேக நபர் 5.8 முதல் ஆறடி உயரம் மதிக்கத்தக்க கறுப்பு நிற ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படுகொலை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலைச் சம்பவம் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாக 416-808-7400 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றத்தடுப்பு பிரிவினா் இலக்கமான 416-222- (8477) என்ற இலக்கத்துக்கும் இரகசிய தகவல் வழங்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனா்.

Police identify 38-year-old woman killed in Scarborough shooting