கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை

Report Print Steephen Steephen in கனடா

இலங்கை இராணுவத்தினர் ஒரு லட்சத்த 46 ஆயிரத்து 679 தமிழர்களை இனப்படுகொலை செய்தனர் என குற்றம் சுமத்தி கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் விஜய் தணிகாசலம் கொண்டு வந்த தனிநபர் பிரேரணை ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனிநபர் பிரேரணைக்கு ஆதரவாக 59 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த பிரேரணை தொடர்பில் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

விஜய் தணிகாசலம் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.