கனடாவில் பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த ஷாருஜன் ஸ்ரீகரன் கைது

Report Print Vethu Vethu in கனடா
1509Shares

கனடாவில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் 19 வயதான ஷாருஜன் ஸ்ரீகரன் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்காபரோவில் கடந்த திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு John Tabor Trail, Wishford Drive பகுதிக்கு அருகில் துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் நடந்த சென்ற 30 வயதான பெண்ணொருவர், சந்தேகநபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தி முனையில் நடத்தப்பட்ட இந்த கொடுமையின் போது, பாதிக்கப்பட்ட பெண் கடுமையாக எதிர்த்துப் போராடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாலியல் வன்கொடுமை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஷாருஜன் ஸ்ரீகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Man charged after woman sexually assaulted in Malvern


you may like this video