ஐந்து நாட்களை கடந்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்லும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரிய நடைபயணம்

Report Print Dias Dias in கனடா
39Shares

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரி கனடா நாடாளுமன்றத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் தனது இலக்கை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக்கோரி கனடாவில் வாழும் தமிழர்கள் இணைந்து நடைபயணம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை கனடாவின் மொன்றியல் நகரில் இருந்து ஆரம்பமான பயணம் நேற்றையதினம் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

இவ் நடைபயணத்தின் நிறைவில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரிய மனுக்கள் கனேடிய நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.