யாழ். பல்கலையில் நினைவுத் தூபி தகர்க்கப்பட்டமையால்....! கனடாவில் பாரிய அளவில் போராட்டம்

Report Print Dias Dias in கனடா
1607Shares

2009ஆம் ஆண்டு தமிழர்களிற்கு இடம் பெற்ற இனப்படுகொலையை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்காக இலங்கை அரசைக் கண்டித்து 4,000க்கு மேற்பட்ட வாகனங்கள் கனேடிய ஈழ உணர்வளர்களால் பேரணியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கனேடிய மக்களின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியானது கனடா நேரம் மதியம் 2:45 மணிக்கு குயின்ஸ்பார்க்கில் நிறைவடைந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதனைக் கண்டித்து கனடாவின் Toronto நகரில் Ontario சட்டசபையினை நோக்கி இந்த வாகன பேரணி இடம்பெற்று வருகிறது.

தொடர்ச்சியாக இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பில் யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது.

இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக கனடாவில் வாழும் தமிழ் இன உணர்வாளர்களால் இக் கண்டன பேரணி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.