யாழ்.பல்கலை துணைவேந்தரிடம் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி முன்வைத்துள்ள பகிரங்க கோரிக்கை

Report Print Kanmani in கனடா
1480Shares

யாழ்.பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட தூபியை மீள நிர்மாணிப்பதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா, இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி பகிரங்க கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடித்து அழிக்கப்பட்டமை மிகவும் அநியாயமான விடயம்.

உயிரிழந்தவர்களின் ஞாபகமாக கட்டப்பட்ட நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

எனவே இலங்கை அரசாங்கம், பல்கலைக்கழக துணைவேந்தர்,இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து உடனடியாக தூபியை மீள நிர்மாணிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்