தை பொங்கல் வாழ்த்து தெரிவித்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Report Print Dias Dias in கனடா
816Shares

கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர், இந்த பண்டிகை அறுவடை திருநாளாகவும், புதிய வருடத்தின் தொடக்கமாகவும் உள்ளது என கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற பொங்கல் விழாவின் போது உரையாற்றுகையிலே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது வணக்கம் என்று தமிழில் தனது உரையை தொடங்கிய அவர், ''கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர், இந்த பண்டிகை அறுவடை திருநாளாகவும், புதிய வருடத்தின் தொடக்கமாகவும் உள்ளது.

இந்த கொண்டாடத்தின்போது நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக கூடி சக்கரை பொங்கல் செய்து, அந்த ஆண்டின் அறுவடைக்கு நன்றி செலுத்துவர். கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

இதன்மூலம் கனடாவில் உள்ள தமிழர்கள் நம் நாட்டின் வெற்றி மற்றும் செழுமைக்காக ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிப்போம், என்று கூறியுள்ளார்.