பாடசாலை மாணவி மீது துஷ்பிரயோகம்! ஆசிரியருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்
759Shares

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை - வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை மாலை பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த அழைப்புக்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments