தப்பிச் சென்றவர் 24 மணி நேரமாகியும் கைது செய்யப்படவில்லை - அச்சத்தில் மக்கள்

Report Print Kari in சமூகம்

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து நேற்று தப்பிச் சென்றதாக கூறப்படும் நரி என்பவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பகுதி மக்கள் நேற்று சுமார் 4 மணித்தியாலம் வரை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

இதன் பின் பொலிஸ் அதிகாரிகளால் 24 மணிநேரத்துக்குள் வர்த்தகரான நரி என்பவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்கள்.

இதனை அடுத்து மக்கள் வீடு திரும்பினார்கள், அனாலும் இன்றுவரை குறித்த நபர் கைது செய்யப்படவில்லை, இதன் காரணமாக பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள், எந்த நேரமும் தங்களுக்கு நரி மூலம் ஆபத்து நேரிடலாம் என்று பயத்தில் உள்ளனர்.

இருந்தும் திராய்மடு, மடுசுவிஸ் கிராமத்தில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் தொடர்கின்றன.

குறித்த சந்தேகநபரான நரி கைது செய்யப்படுவாரா? இல்லையா என்பது இதுவரைக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments