ஒரு மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

Report Print Ramya in சமூகம்

பொரளை பகுதியில் ஒரு மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபரை இன்று காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து 300 பக்கற்றுக்கள் ஹெரோயின் மற்றும் 35 கிராம் ஹெரோயின் பக்கற்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை மாலிகாவத்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Comments