ஈழத்தமிழர் பற்றிய சேரனின் சாடலுக்கு இலங்கை ரசிகர்கள் கொந்தளிப்பு!

Report Print Mohan Mohan in சமூகம்
1598Shares

விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய தமிழ்த் திரைப்படங்கள் திரைப்பட வெளியீட்டுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு தணிக்கை செய்து வெளியிடப்பட்டது.

அத்துடன், விடுதலைப்புலிகளின் நிதித்துறை நிர்வாகத்திற்கு தென் இந்திய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதால் கணிசமான வருவாயே கிடைத்திருந்தது.

இருந்தும் ஒரு காலகட்டத்தில் இந்திய தமிழ்த் திரைப்படங்களை விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்தனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை குறித்த தடை இருந்தது. காரணம் திட்டமிட்டு திருட்டுத்தனமாக ஆபாச காட்சிகளை வெளிப்படுத்தியதே ஆகும்.

இந்நிலையில் இயக்குநர் சேரன் இலங்கை தமிழர்களை சாடி பேசியுள்ளார். பின்னர் என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் யாரைப்பற்றி பேசியிருப்பேன் என்று புரிந்திருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் யாரைப்பற்றி பேசினாரோ அவருக்கும் விடுதலைப்போருக்கும் தொடர்பு இருக்குமோ என்னவோ தெரியாது. எனினும், ஈழத்தமிழர் போராட்டம் பற்றி பேசுவதற்கு அவர் தகுதியானவரா என இலங்கை ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தோடு எந்தக் காரணம் கொண்டும் வியாபாரத்தோடு விடுதலைப்போரை இணைத்துப் பேசுவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You may like this video

Comments