மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர்

Report Print Steephen Steephen in சமூகம்

பன்னல பிரதேசத்தில் 14 வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய பாடசாலையின் அதிபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

மாணவி அதே பாடசாலையில் பயிலும் மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இது பற்றி அறிந்து கொண்ட வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

விசாரணை நடத்துவதற்காக மாணவியை தனது அலுவலகத்திற்குள் அழைத்த அதிபர் அலுவலகத்திற்குள் வைத்து மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

மேலும் மாணவிக்கு தோஷம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அதிபர் தான் அறிந்த சாமியாரிடம் வருமாறு மாணவியிடம் கூறியுள்ளார். எனினும் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மறுநாள் அதிபர் விடுமுறை எடுத்துக்கொண்டு மாணவி பாடசாலை முடிந்து வரும் வரை அங்குருவெல்ல நகரில் தங்கியிருந்துள்ளதுடன் கோயில் ஒன்றுக்கு வருமாறு மாணவிக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மாணவி அங்குருவெல்ல நகரில் உள்ள தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து உறவினர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அதிபரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக கரவனல்லை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments