மழைக்குருவிக் கூடுகளுடன் சீனப் பெண் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

உணவு தயாரிப்பதற்காகவும் உணவாக தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட மழைக்குருவிக் கூடுகளுடன் சீனப் பெண்ணொருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

யால வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து ஹம்பாந்தோட்டை அலுவலகத்தின் அதிகாரிகள் நேற்று மதியம் மத்தள விமான நிலையத்திற்கு அருகில் மேற்கொண்ட தேடுதலில் இந்த பெண் கைது செய்யப்பட்டதுடன் மழைக்குருவி கூடுகளை கைப்பற்றியுள்ளனர்.

மழைக்குருவிக் கூடுகளினால் தயாரிக்கப்படும் உணவுகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், மழைக்குருவிக் கூடுகள் உடைத்து எடுக்கப்படுகின்றன.

இதன் காரணமாக மழைக்குருவிகள் பெருக்கம் குறைந்துள்ளதுடன் அவை அருகியும் வருகின்றன.

Comments