யுவதிகளை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மந்திரவாதி

Report Print Steephen Steephen in சமூகம்

மாத்தளை லக்கலை பிரதேச செயலாளர் பிரிவில் 55 வயதான மந்திரவாதி ஒருவர் இரண்டு யுவதிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

வயோதிபரான தந்தையின் சுகவீனத்தை குணப்படுத்தும் நோக்கில் யுவதிகள் மந்திரவாதியை நாடியுள்ளனர்.

சுகவீனத்தை குணப்படுத்த பூஜை ஒன்றை நடத்த வேண்டும் என மந்திரவாதி கூறியுள்ளார்.

தந்தையின் நோய் குணமாக வேறு ஒரு பூஜை இருப்பதாகவும் தான் யுவதிகளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் தந்தையின் நோய் குணமாகும் எனவும் மந்திரவாதி யுவதிகளிடம் கூறியுள்ளார்.

இதனால் தந்தையை குணப்படுத்த மந்திரவாதி கூறியபடி யுவதிகள் இணங்கியுள்ளனர்.

எனினும் தந்தையை குணப்படுத்துவதாக கூறி தம்மை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மந்திரவாதி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து யுவதிகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Latest Offers

loading...

Comments