மாணிக்கம் என கருங்கல்லை கொடுத்து ஏமாற்றிய பெண்

Report Print Steephen Steephen in சமூகம்

களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் பெண்ணொருவர் திடீரென அறிமுகமாகிய பெண்ணிடம் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை கொடுத்து ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (08) பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

திடீரென சந்தித்த பெண் மாணிக்கக்கல் எனக் கூறி கருங்கல் ஒன்றை கொடுத்து, மற்றைய பெண்ணிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் இரண்டு வளையல்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

கருங்கல்லை மாணிக்கக்கல் எனக் கூறி தன்னை பெண் ஏமாற்றிவிட்டார் என்பதை அறிந்து கொண்ட தங்கத்தை பறிகொடுத்த பெண் சம்பவம் குறித்து பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Latest Offers

loading...

Comments