மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தில் வன்முறையில் ஈடுபட்ட 25 பேர் கைது

Report Print Ashik in சமூகம்

மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தில் கடந்த சில தினங்களாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இது வரை அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் என 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தில் இரு குழுக்களுக்கிடையில் விளையாட்டு நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தர்க்கம் பாரிய கைகலப்பாகிய நிலையில், தொடர்ச்சியாக குறித்த கிராமத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டு வந்தது.

இரு குழுக்களுக்கிடையில் மாறி மாறி ஏற்பட்ட கைகலப்பின் போது காயமடைந்த பலர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் குறித்த கிரமத்தில் அமைதியினை நிலை நாட்டும் வகையில் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குறித்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்து வன்முறையில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த 25 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் குறித்த நபர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த கைதுகளை தொடர்ந்து பனங்கட்டிக்கோட்டு கிராமத்தில் சற்று அமைதி நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Comments