உலகை உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இன்று வயது 15

Report Print Murali Murali in சமூகம்
216Shares

இன்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னார் இதே நாளில் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை முழு உலகம் அறிந்துகொண்ட நாளாக அமைந்தது.

ஆம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கம்பீரமாக எழுந்து நின்ற உயரமான இரட்டை கோபுரங்கள், பயங்கரவாத அமைப்பான அல்-குவைதா தீவிரவாதிகளினால் அழிக்கப்பட்டது.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி காலை 8:46 மணிக்கு, 19 பேர் கொண்ட அல்-குவைதா தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு சொந்தமான, நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர்.

அவ்வாறு கடத்திய முதல் இரண்டு விமானங்களையும் நியூயோர்க் உலக வர்த்தக மையத்தின், இரட்டை கோபுர கட்டடங்களின் மீது அடுத்தடுத்து மோத செய்து முழு உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

இந்த தாக்குதல் இடம்பெற்று 1 மணி 42 நிமிடத்துக்குள், தலா 110 மாடிகள் கொண்ட அந்த உயர்ந்த இரண்டு கட்டடங்களும் தரைமட்டமாகின.

இந்த தாக்குதலின் போது விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேருடன், கட்டடத்தில் இருந்த 2,606 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடத்தப்பட்ட மூன்றாவது விமானத்தை அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான, பென்டகன் மீது மோதச் செய்து மற்றுமொரு தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலின் போது விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

மேலும், நான்காவது விமானம் சாங்ஸ்வில் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது.

இதையடுத்து பின்லேடனையும், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பையும் அடியோடு ஒழித்துக்கட்ட தீர்மானித்த அமெரிக்கா 'பயங்கரவாதிகள் மீது போர்' என்ற நடவடிக்கையை ஆரம்பித்தது.

இந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து உலக நாடுகள் பலவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் 9 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலின் முடிவில் 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி ஒசாமா பின்லேடன் கொள்ளப்பட்டார்.

தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பழிக்கு பழி வாக்கும் முயற்சிக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல, இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், ஒரு வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டு 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி திறக்கப்பட்டது.

மேலும் 'நெஷனல் செப்டம்பர 11 மெமோரியல் என்ட மியூசியம்' என்ற நினைவு மையம் மற்றும் பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியிலும் நினைவு மையம் என்பன திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments