பிரான்ஸில் எழுச்சியுடன் இடம்பெற்ற உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு

Report Print Dias Dias in சமூகம்

இந்த வருடம் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி பாரிஸ் நகரில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சீ.யோகேஸ்வரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் இந்திய சட்டக் கல்லூரியின் மேலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ராம்மூத்தியும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இன்றைய சூழலில் தமிழ் மொழியும் கலாச்சாரமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் முகமாக இந்த மாநாடு இடம்பெற்றது.

தொடர்ச்சியாக தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கானல் நீராக மாற்றப்பட்டு கொண்டு வருகின்ற இக் காலக்கட்டத்தில் தமிழ் இளைஞர்களிடையே கலாச்சார சீரழிவை உருவாக்கி கொண்டு வரும் இக் காலப்பகுதியில் இந்த மகாநாடு மிகவும் பிரதானமானதாகும்.

இந்த மகாநாடு பாரிஸ் 17 La Fourche க்கு அண்மையில் உள்ள சர்ச் மண்டபத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொறிசியஸ், றியூனியன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் தமிழ் பேராளர்கள் பலர் குறித்த மாநாட்டில் கருத்துரை வழங்கினர்.

மேலும் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகள் பற்றிய ஆய்வரங்கம், பிரபல கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கம், அரங்கமும் அதிர்வும் எனும் பல்சுவை நிகழ்வுகள் போன்றவற்றுடன் நடனம், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டுக்கூத்துகள் என தமிழர் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றன.

அத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணக் கண்காட்சியுடன் விழாவின் சிறப்புமலர் வெளியீடும் இடம்பெற்றது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை.கணேசலிங்கம், தலைவர் வி.சு.துரைராஜா, மாநாட்டு செயலாளர் ம.இரவீந்திரநாதன், மாநாட்டின் தலைவர் இ.க.அரியரத்தினம் போன்றோர் உட்பட உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் பல நூறு பொது மக்கள் நிகழ்வைச் சிறப்பித்தனர்.

Latest Offers

loading...

Comments