ஜனாதிபதியின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் - அறிக்கை விரைவில்

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்து அதில் உள்ள தரவுகளை மாற்றிய சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்க உள்ளதாக கணினி அவசர பதில் அமைப்பு தெரிவித்துள்ளது.

விசாரணைகள் முடிவுக்கு வந்தவுடன் அறிக்கை கையளிக்கப்படும் என அந்த அமைப்பின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த சம்பவம் தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினைகள் பற்றி விசாரணைகளில் தேடி அறியப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவடைந்து விடும் என்றும் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments