முதியவர் ஒருவரை அச்சுறுத்திய நபர்களுக்கு ஏற்பட்ட கதி

Report Print Mohan Mohan in சமூகம்

கிளிநொச்சி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதியவர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு 09-09-2016 தொடக்கம் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு தலா பத்தாயிரம் ரூபா நட்ட ஈடு செலுத்துமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி நகர் பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் வீட்டையும் அதன் காணியையும் இராணுவத்திடமிருந்து பெற்றுத்தருவதாககூறி, அதற்காக ஒருதொகைப் பணத்தை கப்பமாக பெற்றுக் கொள்ள குறித்த ஐந்து பேரும் முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர்களை கிளிநொச்சி பொலிசார் கைது கடந்த 2011ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த ஐந்து பேருக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒருவருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட நபருக்கு தலா பத்தாயிரம் ரூபா நட்டஈடு செலுத்து மாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments