விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச குழு அவசியம்! ஐ.நா சபையிடம் கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளின்போது நச்சு ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இலங்கையின் தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நான்காவது ஈழப்போர் முடிவடைந்தநிலையில் இலங்கை படையினரால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள், சமூகத்தில் இணைக்கப்பட்ட பின்னர் தொடர்ந்தும் சுகவீனங்களுக்கு உள்ளாகி வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த போராளிகளுக்கு நச்சு மருந்துகள் செலுத்தப்பட்டனவா? என்பதை மருத்துவர்களால் கண்டறியமுடியாது

எனவே மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளுமே இதனை கண்டறியமுடியும் என்று இலங்கை தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் அழைப்பாளர் கே.எஸ். ரட்னவேலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செல்வதால், இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

எனவே, சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் அழைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த கடிதத்தில், இலங்கை மாத்திரமன்றி சர்வதேசத்திலும் முன்பு நச்சூட்டல் சம்பவங்கள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு அரேபிய புலனாய்வு முகவர் கட்டாப், ரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சாண்டர் பேர்பிலிலிசினி 2009ஆம் ஆண்டு மரணமானமை, யுக்ரெய்னின் மேற்கத்தைய சார்பு ஜனாதிபதி விக்டர் ஏ யுஷ்சேக்கோ பாதிக்கப்பட்டமை உட்பட்ட சம்பவங்கள் இந்தக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Latest Offers

loading...

Comments