அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மக்கள்! கண்டு கொள்ளாத அரச அதிகாரிகள்

Report Print Murali Murali in சமூகம்

மன்னார் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், காணி இல்லாதவர்களுக்கு நான்காம் வீதி என ஒரு வீதி அமைத்து, அங்கு வீட்டு திட்டங்கள் அமைத்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இன்றுவரையிலும் தமக்கு சென்று வருவதற்கு வீதியோ, குடி நீரோ வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால் தாம் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...

Comments