சூதாட்ட நிலைய உரிமையாளர் கைது! விசாரணைகள் தீவிரம்

Report Print Murali Murali in சமூகம்

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாக சூதாட்ட நிலையங்களை நடத்திவந்ததாக கூறப்படும் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஞ்சாப்பைச் சேர்ந்த சகோதரர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது, கைது செய்யப்பட்டவர்களில், ஒருவர் பஞ்சாப்பில் முன்னாள் திரைப்படத் தயாரிப்பாளர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் இரகசிய சூதாட்ட மையங்களை நடத்தி வந்ததாகவும், இதற்காக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி இருந்த நிலையில், மீண்டும் டெல்லி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...

Comments