வெலிக்கடை சிறைக்குள் நடக்கும் மர்மங்கள்! அம்பலப்படுத்தும் சிறைக் கைதி

Report Print Vethu Vethu in சமூகம்

சமகாலத்தில் இலங்கையில் பெரிதும் பேசப்படும் விடயமாக வெலிக்கடை சிறைச்சாலையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இரட்டை கொலை குற்றச்சாட்டின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் பிணையில் விடுதலையான சந்தேகநபர் ஒருவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்த போதிலும் சட்டம் செயற்படும் முறை தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்படுத்தும் பல தகவல் வெளியாகியுள்ளது.

பலர் அறிந்ததனை போன்று சிறைச்சாலையினுள் பாரிய தவறான செயல்கள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவற்றின் பல சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடனும் கவன குறைவினாலும் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று விடுமுறையை கழிப்பதற்கு கனவு காணும் பலர் அந்த ஹோட்டல் பெகேஜ் தொடர்பில் நன்கு அறிந்திருப்பதனை போன்று வெலிக்கடை சிறைச்சாலையினுள் கைதிகளுக்காக செயற்படுத்தப்படும் பெகேஜ் முறை ஒன்று உள்ளது.

தினமும் குளிப்பதற்கு நீர் கொண்டு வருவதற்கு - மாதாந்தம் 4000 ரூபாய்

தொலைப்பேசி பயன்படுத்துவதற்கு - 3000 ரூபாய்

விரும்பிய அறையை தெரிவு செய்துக் கொள்வதற்கு - 25,000 ரூபாய்

சிகரட் ஒன்று - 250 ரூபாய் (கஞ்சா, போதைப்பொருட்கள் விலைகள் வித்தியாசப்படும்)

பல பெகேஜ்கள் உள்ள நிலையில் சிறைச்சாலையினுள் இடம்பெறுகின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்கு வெகு விரைவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Comments