சிறையில் இருந்து தப்பிச்சென்ற இளைஞனின் தந்தையிடம் தொலைபேசியில் உரையாடிய பொலிஸ்மா அதிபர்

Report Print Kumutha Kumutha in சமூகம்

கடந்த 5ஆம் திகதி பதகிரிய பிரதேசத்தில் நெல்லினை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் சிறையில் தப்பிச் சென்று ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தப்பிச்சென்ற இளைஞன் குறித்து அவரது தந்தையிடம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று இரவு தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்திற்கான பொறுப்பை தான் ஏற்பதாகவும் இளைஞனின் தந்தையிடம் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளதாக இளைஞனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த கைதி தப்பிச் சென்றதையடுத்து ஹம்பாந்தோட்ட பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த இளைஞன் காணாமல் போய் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இவரைப் பற்றி எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை ஹம்பாந்தோட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments