நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சென்ற நாய் - விசாரணைகளுக்காக சென்றிருக்குமோ?

Report Print Steephen Steephen in சமூகம்

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு தற்போது இலங்கையில் பிரபல நபர்கள் பலர் சென்று வருவதை நாம் கண்டுள்ளோம்.

ஆனால், நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குள் பிரபலமில்லாத ஒருவர் இன்று சென்றதை காணமுடிந்தது.

இவர் சென்ற விதம் அங்கிருந்த பலரது நகைப்புக்கு காரணமாகியது. எவருக்கும் தெரியாமல், இவர் உள்ளே சென்றதே இதற்கு காரணம்.

இது வேறு யாருமல்ல, அங்கிருந்த நாய் ஒன்றே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குள் சென்றது.

இதைப் போன்றே அண்மையில் பாராளுமன்றத்திற்குள் ஒரு பாம்பு அழையா விருந்தாளியாக சென்றது.

இவ்வாறு மனிதர்களும் பெரிய அரசியல் வாதிகளும் வந்து செல்லும் முக்கிய இடங்களில் இவ்வாறான விசித்திர சம்பவங்கள் அங்குள்ளவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

Latest Offers

loading...

Comments