ஹிருணிகாவுக்கு சவாலாக புகைப்படங்களை பிரசுரித்த திலினி

Report Print Ajith Ajith in சமூகம்

தனது தந்தை துப்பாக்கி சூட்டுக்காயத்துடன் இறந்த புகைப்படத்தை பாரத லக்ஸ்மனின் மகளான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா, வலைத்தளத்தில் பிரசுரித்த சில நாட்களில் இந்த சம்பவத்துக்காக மரண தண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வாவின் சகோதரி திலினி சில்வா, தமது சகோதரன், சிகிச்சைப்பெற்று வந்த 17 புகைப்படங்களை வலைத்தளங்களில் பிரசுரித்துள்ளார்.

கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மற்றும் சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் வைத்தியசாலை ஆகியவற்றில் துமிந்த சில்வா சிகிச்சை பெற்றதாக கூறப்படும் புகைப்படங்களையே அவர் பிரசுரித்துள்ளார்.

குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டவை என்றும் திலினி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments