ஆயுர்வேத மத்திய நிலையத்தின் தலைவர் சிறை பிடிப்பு

Report Print Kumutha Kumutha in சமூகம்

நாவின்ன ஆயுர்வேத கூட்டுத்தாபனம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஏற்பட்ட குழப்பநிலையே இதற்குக் காரணம் எனவும் இதன் தலைவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் அலுவலகத்தில் வைத்து மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமையாளர் ஆகியோர் ஊழல்வாதிகள் எனவும் அவர்களை பதவி நீக்கிவிட்டு அந்த வெற்றிடங்களுக்கு வேறு நபர்களை நியமிக்குமாறும் கோரி இதன் ஊழியர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சில நாட்களாக கடமைக்கு சமூகமளிக்காது இன்று பொலிஸ் பாதுகாப்புடன் அங்கு கடமைகளின் நிமித்தம் சென்றுள்ளார்.

இந்தநிலையில் அங்கு கூடிய ஊழியர்கள் போராட்டத்தை மேற்கொண்டதால் அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Comments